தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஆளுநரை சந்தித்து ஒய்.எஸ்.ஷர்மிளா கோரிக்கை

ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஷர்மிளாதெலங்கானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று தெலங்கானா ஆளுநரை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த கடிதத்தில், “கேள்வி கேட்கும் குரல்களை மிரட்டி, அடித்து, துன்புறுத்தும் வகையில் தெலங்கானாவில் நிலவும் பரிதாபமான சூழ்நிலையை, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் ஒய்.எஸ். ஷர்மிளா ஆகிய நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் அரசின் பாசிச நிர்வாகத்தால் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை. எங்களின் பாதயாத்திரையின் போது பிஆர்எஸ் குண்டர்கள் எங்களைத் தாக்கினர், எங்கள் முகாம் அமைப்பை சூறையாடினர், எங்கள் பொருட்களை அழித்தார்கள். வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் எங்களைத் தாக்கினர். மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று என்னை அச்சுறுத்தினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளும் கட்சி நிதியுதவி செய்வதாகவும் அவர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குற்றம்சாட்டினார். அவர், "மூன்று நாட்களுக்கு முன்பு, வாரங்கலில் ஒரு இளம் காங்கிரஸ் தலைவர் பிஆர்எஸ் குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். நான் உடனடியாக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரைப் பார்க்கச் சென்றேன். இத்தகைய தாக்குதல்களை நடத்திவரும் பிஆர்எஸ் ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in