அமைச்சரிடம் தொகுதி வளர்ச்சி பற்றி கேள்வி: பொது அமைதியைக் குலைத்ததாக யூடியூபர் மீது வழக்கு

யூடியூபர்
யூடியூபர்அமைச்சரிடம் தொகுதி வளர்ச்சி பற்றி கேள்வி: பொது அமைதியைக் குலைத்ததாக யூடியூபர் மீது வழக்கு

உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் தனது கிராமத்திற்குச் சென்றபோது, நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய யூடியூபர், பொது அமைதியை குலைத்ததாக வழக்கு பதிவு செய்து காவலில் வைக்கப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள புத் நகர் கந்துவா கிராமத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக சனிக்கிழமையன்று சென்றபோது, உள்ளூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாநில இடைநிலைக் கல்விக்கான இணை அமைச்சர் குலாப் தேவியிடம், "மொராதாபாத் உஜ்ஜாலா" என்ற யூடியூப் சேனலில் பணியாற்றும் சஞ்சய் ராணா தொகுதியில் நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து, யூடியூபரால் பொது அமைதி குலைந்ததாக பாஜக நிர்வாகி புகார் அளித்ததைத் தொடர்ந்து, சஞ்சய் ராணா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் வழங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவை குறிவைத்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இது பாஜக அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் படம்," என்று ட்வீட் செய்துள்ளார்,

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in