குளியல் சோப்புடன் கவனத்தை ஈர்த்த குறும்பட இயக்குநர்: கூலாக பதில் அளித்த தொகுதி எம்எல்ஏ

குளியல் சோப்புடன் கவனத்தை ஈர்த்த குறும்பட இயக்குநர்: கூலாக பதில் அளித்த தொகுதி எம்எல்ஏ

சீரமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. அந்தவழியாக தொகுதியின் எம்.எல்.ஏ வருவதை அறிந்த வாலிபர் ஒருவர் தேங்கி இருந்த மழைநீரில் சோப்புப்போட்டு குளித்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கேரளத்தின் மளப்புரம் பாண்டிக்காடு பகுதியில் பிரதான சாலையில் பழுது ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக சம்பந்தப்பட்ட மஞ்சேரி தொகுதியின் எம்.எல்.ஏவும், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான லத்தீப் தன் காரில் வந்தார்.

தன் தொகுதியின் எம்.எல்.ஏ வருவதைப் பார்த்துவிட்டு அவரது கவனத்தை ஈர்க்கும்வகையில் ஹம்சா பொர்லியில் என்னும் வாலிபர் உடனே தன் வீட்டுக்குள் போய் இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளியல் சோப்பு, பக்கெட் உடன் வந்தார். இவர் ரப்பர் தொழிலாளியாகவும், குறும்பட இயக்குநராகவும் உள்ளார். தேங்கிக் கிடந்த மழை நீரில் குளித்துவிட்டு, தன் உடைகளையும் துவைத்தார். எம்.எல்.ஏ லத்தீபைப் பார்த்ததும் ஒற்றைக்காலில் நின்றவாறே அவரை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்தார்.

இந்த சாலை அண்மையில் தான் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டிருந்தது. மழைக்கு இப்படி சேதமாகி இருப்பது குறித்து எம்.எல்.ஏவின் கவனத்தை ஈர்க்கவே, ஹம்சா பொர்லியில் இப்படிச் செய்தார். ஆனால் காரை நிறுத்திய லத்தீப், ‘இந்த இடத்தில் ஒரு வாழை மரத்தை நட்டுவையுங்கள். அதுபோதும்’ என்று கூலாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in