‘இளைஞர்கள் என்னை ஆதரிக்கிறார்கள், மூத்தவர்கள் கார்கேவுடன் இருக்கிறார்கள்’ - சசி தரூரின் புது ரூட்

‘இளைஞர்கள் என்னை ஆதரிக்கிறார்கள், மூத்தவர்கள் கார்கேவுடன் இருக்கிறார்கள்’ - சசி தரூரின் புது ரூட்

இளைஞர்கள் மற்றும் கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தன்னை ஆதரிப்பதாகவும், மூத்தவர்கள் தனது போட்டியாளரான மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையின்போது பேசிய சசி தரூர், “ எனக்கு இளம் வாக்காளர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. கீழ்மட்டத்தில் இருந்து எனக்கு நல்ல கருத்துகள் கிடைத்து வருகின்றன. மூத்தவர்கள் கார்கேவுடன் செல்கிறார்கள். நாங்கள் மாற்றத்தைப் பற்றி பேசுகிறோம், வயதானவர்கள் அதை எதிர்க்கிறார்கள். காங்கிரஸில் காந்தி குடும்பம் பிரபலமானது. அவர்களின் டிஎன்ஏ கட்சியின் இரத்தத்தில் ஓடுவதால், எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் காந்திகளிடமிருந்து விலகி இருப்பது முட்டாள்தனமாக இருக்கும்.

புதிய காங்கிரஸ் தலைவர் கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்றுவார். வாக்குப் பிரிவைக் குறைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை உருவாக்குவதே தனது முன்னுரிமை. நாம் ஒரு தேசிய 'கத்பந்தன்' (கூட்டணி) அமைக்க உழைக்க வேண்டும். தேசிய அளவில் அது சாத்தியமில்லை என்றால், மாநில வாரியாக நாம் ஆராய வேண்டும்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் இளைய இரத்தத்தை தலைமைத்துவத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவது எனது பதவிக்காலத்தின் மையமாக இருக்கும். பல சகாக்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறினர். எனது பதவிக்காலத்தில், புறக்கணிப்பு காரணமாக யாரும் வெளியேற மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் கட்சியின் தலைவர் தேர்தல் ஆகியவை காங்கிரஸுக்கு மிகப்பெரிய இழுவையை உருவாக்கியுள்ளன என்றும், தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து எங்களுக்குக் கிடைத்ததைப் போன்ற ஊடக கவனத்தை கடந்த எட்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்றும் சசி தரூர் கூறினார்.

சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடும் தலைவர் தேர்தல் அக்டோபர் 17 ம் தேதி நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 ம் தேதி அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in