`இது தெரியவாய்ப்பில்லை; குறைந்தபட்சம் பேப்பரையாவது படியுங்கள்'- ஆளுநரை சாடும் அமைச்சர் பொன்முடி

பொன்முடி
பொன்முடி`இது தெரியவாய்ப்பில்லை; குறைந்தபட்சம் பேப்பரையாவது படியுங்கள்'- ஆளுநரை சாடும் அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறையின் பொற்காலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை குறைந்தப்பட்சம் ஆளுநர் பேப்பர் படித்தாவது தெரிந்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’முதல்வர் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார்.

தமிழகத்தில் கல்வி தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார். உயர்கல்வியில் தமிழகத்தின் பொற்காலமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஆளுநருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் குறைந்தபட்சம் பேப்பரையாவது படிக்க வேண்டும். அரசியல்வாதி போன்றும் எதிர்க்கட்சி போன்று பேசுவது வருந்ததக்கது. வெயில் அதிகமாக இருக்கிறது என்றால் அவர் மட்டும் காற்று வாங்க ஊட்டி சென்றிருக்கலாம், அதைவிடுத்து துணை வேந்தர்களையும் அழைத்து சென்றது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறந்த கல்லூரிகள் பட்டியலில் அரசு கல்லூரியான மாநில கல்லூரி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி தான் முதலிடம் பிடித்துள்ளது. கல்வித்தரம் குறைந்துவிட்டது எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார், எந்த கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் என்று தெரியவில்லை.

அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆளுநர் நடந்துக் கொண்டுள்ளார். கல்வித்துறையில் அரசியலைப் புகுத்த வேண்டுமென்று ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in