எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி பதற்றமாக்கியிருக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தமிழர் திருநாளில் எஸ்பிஐ வங்கியின் முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம் . ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம். எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழர் திருநாளில் எஸ்பிஐ வங்கியின் முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம். மாண்புமிகு தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம்.

20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கயமைத்தனத்தை கடைபிடிக்கிறது ஒன்றிய அரசு. எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள். 13,000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். எங்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது. தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in