`தமிழ்நாட்டின் பெருமை நீங்கள்'- கிரிக்கெட் வீரர் அஸ்வினை வாழ்த்தும் அமைச்சர் உதயநிதி

கிரிக்கெட் வீரர் அஸ்வின்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் `தமிழ்நாட்டின் பெருமை நீங்கள்'- கிரிக்கெட் வீரர் அஸ்வினை வாழ்த்தும் அமைச்சர் உதயநிதி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடம் பிடித்ததற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போடட்டிகளில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவிசந்திரன் அஸ்வின் 6 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் எடுத்திருந்தார். டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நம்பர் 1 இடத்தை, ரவிசந்திரன் அஸ்வினும், இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆண்டர்சனும் ஒரே புள்ளியின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர். இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு அஸ்வின் கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று, 869 புள்ளிகளுடம் முதலிடத்தில் இருக்கிறார். 859 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டசனும், 841 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில், அஸ்வின் முதலிடம் பிடித்ததற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் பெருமை ரவிசந்திரன் அஸ்வின். பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்ததன் மூலம் எங்களை பெருமைப்படுத்துகிறார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பை பறைசாற்றுகிறது. இன்னும் பல புகழ் உங்களை நோக்கி வர இருக்கிறது” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in