`நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்’ - பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!

பஞ்சாப் ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது என பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் பஞ்சாப்பில், மாநில அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 27 சட்ட மசோதாக்களில் 22 சட்ட மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்திருக்கிறார். அவற்றில், கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்ற நான்காவது பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வின்போது, மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நிதி மசோதாக்களில் இரண்டுக்கு மட்டும் ஒப்புதல் அளித்திருக்கிறார் பன்வாரிலால் புரோஹித்.

இந்த நிலையில், சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை முடக்கி வைப்பது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இந்த செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நெருப்புடன் விளையாடுவது சரியா என்பதை யோசித்து பாருங்கள் என காட்டமாக தெரிவித்தனர்.

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கடுமையாக சாடியது. பஞ்சாப் மாநில அரசும் மாநில ஆளுநரும் செயல்படுகிற போக்குகள் மிகவும் கவலைக்குரியது; இருதரப்புமே அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றன எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in