17 வயதாகிவிட்டதாக உங்களுக்கு!- வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!

17 வயதாகிவிட்டதாக உங்களுக்கு!- வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!

17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அவர்களே வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். தற்போது, அந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. 17 வயது பூர்த்தியடைந்தாலே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

"18 வயது பூர்த்தியாகும் வரை வாக்காளர் அட்டைக்காக காத்திருக்க தேவையில்லை. 17 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த வாக்காளர்கள் தனது முதல் வாக்கை பதிவு செய்யலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in