ஞானத் தந்தையைத் தந்தையாகவே கருதி மரியாதை செய்த யோகி!

வேட்புமனுவில் தந்தையின் பெயராக மகந்த் அவைத்யநாத்தின் பெயரை யோகி குறிப்பிட்டார்
ஞானத் தந்தையைத் தந்தையாகவே கருதி மரியாதை செய்த யோகி!
யோகி ஆதித்யநாத்

தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பவுடி கட்வால் பகுதியில் 1972-ல் பிறந்த யோகி ஆதித்யநாத், இரண்டாவது முறையாக உத்தர பிரதேசத்தின் முதல்வராகிறார். அவரது தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட், வனத் துறை ரேஞ்சராகப் பணியாற்றி 1992-ல் ஓய்வுபெற்றவர்; 2020-ல் காலமானார்.

எனினும், தனது தந்தை உயிரோடு இருந்தபோதே தேர்தல் மனுக்களில் ‘தந்தை’ எனும் இடத்தில் வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டவர் யோகி. அவரது பெயர் - மகந்த் அவைத்யநாத்.

கட்வால் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப் படிப்பு பயின்றவரான யோகி, பல்கலைக்கழக நாட்களில் ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக இயங்கியவர். அந்தக் காலகட்டத்தில் பாஜக எம்.பி-யாக இருந்த மகந்த் அவைத்யநாத், யோகி மீது மிகுந்த அன்பு செலுத்தினார்.

கோரக்பூரில் உள்ள கோயிலின் தலைவராகவும் இருந்த மகந்த் அவைத்யநாத், தனக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யோகி ஆதித்யநாத் தான் வர வேண்டும் என்று விரும்பினார். 1994 -ல் அதை முறைப்படி அறிவித்தார். அப்போது யோகிக்கு வயது 22 தான்!

அதே அவைத்யநாத் தான், யோகியின் அரசியல் பாதைக்கும் அடித்தளமிட்டார். 1998 மக்களவைத் தேர்தலில் தனது கோரக்பூர் தொகுதியை யோகிக்கு விட்டுத் தந்தார். அந்தத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றார் யோகி. தனது ஆன்மிக வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமிட்ட அவைத்யநாத் மீது யோகி மிகுந்த நன்றியும் மரியாதையும் வைத்திருந்தார்.

அதனால்தான், 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டப்பேரவை மேலவைத் தேர்தல் என இரண்டு முறை, வேட்புமனுவில் தந்தை எனும் இடத்தில் அவைத்யநாத்தின் பெயரை யோகி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in