'மக்கள் நேசிக்கும் முதல்வர்'... சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு!

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை மக்கள் நேசிக்கும் முதல்வர் என பாஜக தலைவரும்,  முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பாராட்டியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எடியூரப்பா, சித்தராமையா
எடியூரப்பா, சித்தராமையா

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் தொகுதி பாஜக எம்.பியாக இருந்துவந்த சீனிவாச பிரசாத்  கடந்த ஏப்ரல் 29 ம்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மைசூரு மண்டலத்தில் தலித் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மைசூருவில் நேற்று நடைபெற்றது.    

பாஜக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையாவும்  கலந்து கொண்டார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள அவரும், முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவும் ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

எடியூரப்பா
எடியூரப்பா

இந்த கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, முதல்வர்  சித்தராமையாவை 'ஜனபிரிய' (மக்கள் நேசிக்கும்) முதல்வர் என்று கூறி அவரை புகழ்ந்து பேசினார். இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.  அவர்கள் அரசியல், கொள்கைகள் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர்களாக உள்ளனர். எடியூரப்பாவின் பேச்சு கர்நாடக மக்களிடையே அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in