ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவா பாரத் ஜோடோ யாத்திரை? - காங்கிரஸ் பதில்

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவா பாரத் ஜோடோ யாத்திரை? - காங்கிரஸ் பதில்

பாரத் ஜோடோ யாத்திரை என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரியானாவின் கர்னாலில் நடைபெறும் நடைபயணத்தின்போது பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்த பாரத் ஜோடோ யாத்திரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக அல்ல. இது ஒரு சித்தாந்த யாத்திரையாகும், இதில் முக்கிய முகம் ராகுல் காந்தி. இது ஒரு தனி நபரின் யாத்திரை அல்ல. வெறுப்பு, அச்சம் மற்றும் பிரிவினை அரசியலுக்கு முடிவு கட்டும் நோக்கில்தான் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

பாரத் ஜோடோ யாத்திரைக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராடுவதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தையும் அமைப்பையும் வலுப்படுத்தவும், தேசத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

எனவே, பொருளாதார சமத்துவமின்மை, சமூக துருவமுனைப்பு மற்றும் அரசியல் எதேச்சாதிகாரம் ஆகிய மூன்று பெரிய பிரச்சினைகளை ராகுல் காந்தி யாத்திரையில் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in