உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு ரவுடி... கர்நாடகா முதல்வர் மகனின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு ரவுடி. அப்படிப்பட்டவரை பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அடுத்து அமர வைத்துள்ளார் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் யதீந்திரா சித்தராமையா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யதீந்திரா சித்தராமையா
யதீந்திரா சித்தராமையா

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான யதீந்திரா சித்தராமையா ஹனூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் நேற்று பேசினார். அப்போது அவர் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை கடுமையாக சாடினார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை ரவுடி என்றும், குஜராத் இனப்படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் குற்றம் சாட்டினார். அப்படிப்பட்டவர் தற்போது நாட்டின் மிக உயர் பதவியில் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அடுத்தபடியாக அமரவைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

இதுகுறித்து கர்நாடகா சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ஆர்.அசோக் கூறுகையில், யதீந்திராவுக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை. இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பவரை பற்றி சித்தராமையாவின் மகன் சிறுப்பிள்ளைத்தனமாக பேசுகிறார். ராகுல் காந்தி இப்படி பேசி ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு வந்தார் என்பதை யதீந்திரா மறக்க வேண்டாம். இப்படி பேச்சு அவரின் டிஎன்ஏவில் உள்ளது. அவர் மீது புகார் அளிப்போம் என்றார்.

மேலும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சி.என்.அஸ்வத்தநாராயணன் உள்பட பலர் யதீந்திர சித்தராமையாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் மைசூரில் போட்டியிட சீட் கிடைக்காததால, யதீந்திரா விரக்தியடைந்துள்ளார். அதனால் இப்படி பேசுகிறார் என்று பாஜக எம்.பி எஸ்.முனியசாமி கிண்டல் செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,மைசூரில் இருந்து யதீந்திரனுக்கு டிக்கெட் தருவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்தார், ஆனால் கொடுக்கவில்லை. அதனால் அவர் விரக்தியில் இருக்கிறார், அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறார். அவர் சிறு குழந்தை, அரசியலில் அனுபவம் இல்லாதவர்.அவர் பாஜக மற்றும் அதன் தலைமைக்கு எதிராக எவ்வளவு அதிகமாகப் பேசுகிறாரோ, அவ்வளவுக்கு பாஜக வலுவடைகிறது,” என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in