அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிய யஷ்வந்த் சின்ஹா!

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிய யஷ்வந்த் சின்ஹா!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்பளித்தார்.

இதன் பின் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, மமக ஆகிய கட்சி நிர்வாகிகளிடம் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார். அவருக்கு ஆதரவு அளிப்பது இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in