தவறாக ஒலித்த தேசிய கீதம்: ராகுல் காந்தியின் கூட்டத்தில் சலசலப்பு!

தவறாக ஒலித்த தேசிய கீதம்: ராகுல் காந்தியின் கூட்டத்தில் சலசலப்பு!

மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சியில் தேசிய கீதத்திற்குப் பதிலாக வேறு ஒரு பாடல் சில நிமிடங்களுக்கு இசைக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் உரையின் முடிவில், தேசிய கீதத்திற்கான அறிவிப்பு இருந்தது. ராகுல் காந்தியும் மைக்ரோஃபோனில் இதை மறுபடியும் சொன்னார். இதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த தலைவர்கள் தேசிய கீதத்திற்காக காத்திருந்தனர். ஆனால் அப்போது சில நொடிகள் வேறு ஒரு பாடல் ஒலித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல் காந்தி, தலைவர்களுக்கு சைகை செய்து அந்தப் பாடல் நிறுத்தப்பட்டது. தேசிய கீதம் மீண்டும் இசைக்கத் தொடங்கியது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகின்றனர். மகாராஷ்டிரா பாஜக நிர்வாகி நிதேஷ் ரானே இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பாரத் ஜோடோ யாத்ராவின் நேரடி ஒளிபரப்பிலும், இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள வாஷிம் மாவட்டத்தில் உண்மையில் நடந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in