மகளிர் டூவீலர் திட்டம் கூடுதல் சுமை!

சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்
மகளிர் டூவீலர் திட்டம் கூடுதல் சுமை!

பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தொடர்ந்தால் சுமையாக இருக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

கிராமத்து பெண்கள் பயனடையும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் 2018-ம் ஆண்டு அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கொண்டு வரப்பட்டது. வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம், இவற்றில் எதுகுறைவோ அத்தொகை இத்திட்டத்தில் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பயனாளியாவதற்கு எட்டாம் வகுப்பு படித்து ஓட்டுனர் உரிமம் வைத்திருப்தோடு, ஆண்டு வரும். 2.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் போதும். தமிழகத்தில் ஏராளமான கிராமப்புற பெண்கள் இத்திட்டத்தால் பயன் பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த ஓராண்டாக இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இத்திட்டம் முடக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில்,"பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தொடர்ந்தால் சுமையாக இருக்கும். திமுக ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in