தேர்தலால் நிறுத்தப்படாது... மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் 15ம் தேதி கிடைக்கும்!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள்

வழக்கம்போல இந்த மாதமும் 15 ம் தேதியன்று பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. அந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தபிறகு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 

சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மாதாமாதம் 15 ம் தேதியன்று அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இது குடும்பத் தலைவிகளுக்கு பேருதவியாக அமைந்திருக்கும் நிலையில், இந்த மாதம் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் 15 ம்  தேதியன்று  பணம் கிடைக்காது என்பதாக பேசப்பட்டது. 

இதனால் குடும்பத் தலைவிகள் மத்தியில் ஏமாற்றம் நிலவிவந்தது. இந்த நிலையில் அந்த பணம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார் . இன்று இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "மகளிர் உரிமைத்தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை. ஏற்கெனவே அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிமுறைகளில் உள்ளன.

சத்யபிரதா சாஹு
சத்யபிரதா சாஹு

எனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர,  பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த தேர்தல் ஆணையத்திடம் எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

இதனால் இந்த மாதமும் குறிப்பிட்டபடி 15-ம் தேதி என்று தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்படும் என்ற தகவல் அறிந்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in