திமுக மகளிர் உரிமை மாநாடு மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்காற்றும்... கனிமொழி எம்.பி நம்பிக்கை!

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

திமுக சார்பில் சென்னையில் இன்று நடைபெறவுள்ள மகளிர் மாநாடு, விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியுடன் கனிமொழி எம்.பி
சோனியா காந்தியுடன் கனிமொழி எம்.பி

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மணல்சிற்பத்தை திமுக எம்.பி கனிமொழி நேரில் பார்வையிட்டார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ நாடு முழுவதும் இன்று மக்களுக்கு இடையே காழ்ப்புணர்ச்சி அரசியலை பாஜக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும் போது பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பெண் தலைவர்களின் கருத்துக்களை மையப்படுத்தும் விதமாக இந்த மாநாடு அமைய உள்ளது. இந்த நாட்டில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் உள்ளனர். அவர்களின் கருத்துக்களை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த மாநாடு விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்காற்றும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in