கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாக கிடைக்குமா என்று இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில் முன்கூட்டியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 10-ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!