பிரதமரின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை... பிரியங்கா காந்தி கோபம்!

பிரதமரின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை... பிரியங்கா காந்தி கோபம்!

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில் வைத்தே, மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நவம்பர் 2ம் தேதி அன்று இரவில் ஒரு மாணவி ஐஐடி வளாகத்திற்குள் நடந்து சென்ற போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அந்த மாணவியை இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மாணவியை தவறாக வீடியோ எடுத்து அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

அதையடுத்து அந்த மாணவி வாரணாசியின் லங்கா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதற்கிடையே நாட்டின் உயர்ந்த கல்வி நிலையங்களுள் ஒன்றான ஐஐடி வளாகத்திற்குள்ளேயே மாணவிக்கு நடந்த கொடுமையை அறிந்த சக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து பிரிவு 354 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். ஐஐடி வளாகத்தில் போதிய பாதுகாப்பின்மை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்த நிலையில் ஐஐடியில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாவது, 'ஐஐடி வளாகத்தினுள் வைத்தே ஒரு மாணவி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதனைக் குற்றவாளிகள் வீடியோ எடுத்தும் பதிவும் செய்துள்ளனர். நாட்டின் உயர்ந்த கல்வி நிலையங்களாக உருவாக்கப்பட்ட ஐஐடி-க்கள் தற்போது பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றனவா? பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மாணவிகள் தங்கள் கல்வி நிலையத்திற்குள் கூட சுதந்திரமாக நடக்க முடியாத சூழல் நிலவுகிறது.' என விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in