குடித்துவிட்டு கணவன் தினமும் தொல்லை: மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்தப் பெண்

தற்கொலை
தற்கொலை குடித்துவிட்டு கணவன் தினமும் தொல்லை: மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்த பெண்

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் குடிகாரக் கணவனின் தொல்லையிலிருந்து தப்பிக்க, அவரின் மனைவியும், மகன் மற்றும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நரசிங்பூர் மாவட்டத்தில் 38 வயது பெண், அவரது 19 வயது மகன் மற்றும் 16 வயது மகள் ஆகியோர் குடிகாரக் கணவரின் தொல்லையிலிருந்து தப்பிக்க கதர்வாரா ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். "வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மூன்று உடல்கள் தண்டவாளத்தில் கிடப்பது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது" என்று அப்பகுதி காவல்துறையின் துணைப்பிரிவு அதிகாரி சஷி பதக் கூறினார்.

உயிரிழந்த மகனின் பாக்கெட்டில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், அவரது தந்தை அடிக்கடி குடித்துவிட்டு அவர்களை மிகவும் தொந்தரவு செய்வதால் மூவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று சஷி பதக் கூறினார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in