புடவை கட்டிக்கொண்டு கால்பந்து விளையாடிய பெண் எம்.பி: வைரலாகும் புகைப்படங்கள்

புடவை கட்டிக்கொண்டு கால்பந்து விளையாடிய பெண் எம்.பி: வைரலாகும் புகைப்படங்கள்

திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான மஹூமா மொய்த்ரா புடவையில் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தைக் கலக்கி வருகின்றன.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹூமா மொய்த்ரா. அமெரிக்காவில் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் 2009-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இயங்கிய இவர், பின்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மக்களவையில் அனல் தெறிக்கும் வகையில் பேசக்கூடிய மஹூமா மொய்த்ரா , தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில், மஹுவா ஒரு படத்தில், புடவை அணிந்து கால்பந்தை உதைப்பது போலவும், மற்றொன்றில் கோல் போஸ்ட்டுக்கு அருகில் கால்பந்தை நிறுத்துவது போலவும் உள்ளது.

சேலையில் அவர் கால்பந்து விளையாடியதற்காக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும், அரசியல்வாதியுமான சர்மிஷ்தா முகர்ஜி மொய்த்ராவின் சாதனையைப் பாராட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹுவ மொய்த்ரா புடவையில் கால்பந்து விளையாடுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கால்பந்தை ஊக்குவிக்கும் ஹோப் திவாஸ் காலாவில் கால்பந்து விளையாடும் படங்களை அவர் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in