நிலத்தை அபகரித்ததை தட்டிக்கேட்ட பெண்: தாலியை அறுத்தெறிந்த திமுக நிர்வாகி

நிலத்தை அபகரித்ததை தட்டிக்கேட்ட பெண்: தாலியை அறுத்தெறிந்த திமுக நிர்வாகி

நிலத்தை அபகரித்ததை தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை திமுக நிர்வாகி அறுத்து எறிந்ததாக வேலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் காந்தி, சுப்பிரமணியம். சகோதர்களாக இவர்களுக்கு சொந்தமாக வாணியம்பாடி அருகே உள்ள மதுராஏரிபுதூர் பகுதியில் 7.45 ஏக்கம் நிலம் இருக்கிறது இந்த நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்துள்தாக சகோதர்கள் வேலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், இதனை காந்தியும், சுப்பிரமணியும் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, திமுக நிர்வாகி வெங்கடேசன், தங்களது உறவினர் ஒருவரின் தாலியை அறுத்து எறிந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் அபகரித்ததை தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை திமுக நிர்வாகி அறுத்தெறிந்த சம்பவம் வேலூர் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in