`முதல்வரின் பார்வைக்கு வராமல் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு'

சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``சொத்து வரி உயர்வு தமிழக முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கு வராமல் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்'' என காங்கிரஸ் கமிட்டி மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டிடங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ``தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழக முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கு வராமல் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கெனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்துப்பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள், இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவீத வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in