’கரும்பு விவசாயி’ சின்னம் பெற்றவர் வேட்பு மனு வாபஸ்... கடைசி நேரத்தில் மனம் கேட்காமல் திரும்பப் பெற்றார்!

வேட்புமனு வாபஸ் பெற்ற சந்திரசேகர்
வேட்புமனு வாபஸ் பெற்ற சந்திரசேகர்

கரும்பு  விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் வேட்பாளர் ஒருவர்  தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரும்பு விவசாயி சின்னம்
கரும்பு விவசாயி சின்னம்

கடந்த சில தேர்தல்களாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த சின்னம் மக்களிடையே நன்கு பதிந்துள்ளதால் இந்த தேர்தலிலும் அந்த கட்சி நாம் கரும்பு விவசாயி சின்னத்தையே கேட்டது. ஆனால் இந்தமுறை நாம் தமிழர் கட்சிக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை. 

அதற்கு பதிலாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் நீதிமன்றம் வரை சென்றும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. சின்னத்தைப் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியால் 17 தொகுதிகளுக்கு மேல் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. மற்ற தொகுதிகளில் போட்டியிட அதற்கு  வேட்பாளர்கள் கிடைக்கவில்லை

சீமான்
சீமான்

அந்த 17 பேரில் திருப்பூரில் போட்டியிடும் சந்திரசேகரும் ஒருவர்.  அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு கரும்பு விவசாயி சின்னமும் கிடைத்தது. ஆனால் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று அவர் தனது மனுவை திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். தனது கட்சி தலைமையின் மீது இருக்கும் அதிருப்தியால் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் ‘’நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று தொகுதி முழுக்க தேர்தல் பணி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்காமல் அதில் நான் போட்டியிடுவதால் அவர்கள் என்னிடம் வருத்தப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பை நான் கெடுத்ததாக இருக்கக் கூடாது. கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட எனது மனசாட்சி இடம் தரவில்லை. இதன் காரணமாக எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன்’’ என்று அவர் தெரிவித்தார்.

சின்னம் கிடைக்காமல் நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், சின்னத்தைப் பெற்றும் போட்டியிட முடியாமல் பாரதிய  மக்கள் ஐக்கிய கட்சி தவித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in