விரைந்து நலம் பெற விழைகிறேன்: ஓபிஎஸ் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

விரைந்து நலம் பெற விழைகிறேன்: ஓபிஎஸ் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், " கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in