பைக் நம்பர் பிளைட்டில் 'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்': சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு

பைக் நம்பர் பிளைட்டில் 'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்':  சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற பொதுமக்கள், கேக் வெட்டி கொண்டாடினர். கோயில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது.

ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைத்துறையினர் பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது பக்கத்தில், “விஷ் யூ ஹாப்பி நியூ இயர்” எனப் பதிவிட்டு, பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பைக்கின் நம்பர் பிளேட்டில் எண்களுக்குப் பதிலாக 'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்' என எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in