‘மாற்றத்தின் காற்று வீசுகிறது’ - மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து சரத் பவார் விமர்சனம்

சரத் பவார்
சரத் பவார்‘மாற்றத்தின் காற்று வீசுகிறது’ - மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து சரத் பவார் விமர்சனம்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் புனே நகரில் உள்ள கஸ்பா பெத் என்ற தனது கோட்டையை காங்கிரஸிடம் பாஜக இழந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நாடு முழுவதும் மாற்றத்தின் காற்று வீசுவதை இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “கஸ்பா பெத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது, மக்கள் மாற்று வழியைக் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கிறது. நாடு முழுவதும் தற்போது மாற்றத்தின் காற்று வீசுகிறது" என்று அவர் கூறினார்.

வியாழனன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பாஜக தனது கோட்டையான கஸ்பா பெத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிட்டது, ஏனெனில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர், பாஜக வேட்பாளரான ஹேமந்த் ரசானேவை தோற்கடித்தார்.

பாஜக கடந்த 28 ஆண்டுகளாக மாநில சட்டமன்றத்தில் கஸ்பா பெத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறது. புனேவின் தற்போதைய பாஜக மக்களவை எம்பியான கிரிஷ் பாபட், 2019 வரை இந்த தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றார். இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது, வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன.

60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட 12 இடங்களில் 7 இடங்களில் வெற்றி பெற்றதால், அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சரத் பவார் கூறினார். அவர், "நாங்கள் அங்கு நம்பர் டூ கட்சி. கட்சியின் பொதுச் செயலாளர் நரேந்திர வர்மா நாகாலாந்துக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in