ஓபிஎஸ்சை சந்திப்பீர்களா? - சசிகலா காரசாரமான பதில்

ஓபிஎஸ்சை சந்திப்பீர்களா? - சசிகலா காரசாரமான பதில்

ஓபிஎஸ்சை சந்தீப்பீர்களா என்ற கேள்விக்கு சசிகலா காரசாரமான பதில் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணியில் கட்டபட்டுள்ள ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இன்று சசிகலா கலந்துகொண்டார்.

குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் உங்களை சந்திக்க வந்தால் அவரை சந்திப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, “ அதிமுகவில் இருந்து எல்லாரும் சந்திக்க வந்தாலும் சந்திப்பேன்” என தெரிவித்தார்.

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களுடன் பேசினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ பொறுத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தார். தொடர்ந்து ஈபிஎஸ் உங்களை சேர்க்கமாட்டேன் என சொல்கிறாரே என்ற கேள்விக்கு, “நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்” என பதிலளித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in