எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா?- பிரதமரை சந்தித்த பின்னர் அண்ணாமலை பதில்

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா?- பிரதமரை சந்தித்த பின்னர் அண்ணாமலை பதில்

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழா முடிந்த பின்னர் பிரதமர் மோடி கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். இதன் பின்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை பிரதமர் மோடி நேற்று இரவு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாச்சாரத்தையும பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்" என்றார்.

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் எதுவும் கிடையாது. நிகழ்ச்சியை நன்றாக செய்கிறார்கள் என்று பாராட்டினால் அது கூட்டணி என்று கிடையாது. பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடியது என்றார்.

அதே நேரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை பிரதமர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஓபிஎஸ் சந்தித்து பேசுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in