`அண்ணாமலை பச்சைப்பொய் சொல்லி வருகிறார்'- அமைச்சர் செந்தில் பாலாஜி

`அண்ணாமலை பச்சைப்பொய் சொல்லி வருகிறார்'- அமைச்சர் செந்தில் பாலாஜி

``மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயரம் என்ற கருத்து மிகவும் தவறானது. முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள புதிய மின்சார திருத்த மசோதாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்" என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள். மக்கள் முதலமைச்சர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த மசோதா பற்றியும், அதனால் மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் உயரக்கூடும் என்று செய்தி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயரம் என்ற கருத்து மிகவும் தவறானது. முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள புதிய மின்சார திருத்த மசோதாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஏப்ரல் மதம் வாட்ச் பில்களை தருவதாக கூறுகிறார் அண்ணாமலை. அதற்காக ஏன் ஏப்ரல் மதம் வரை காத்திருக்க வேண்டும். பில் இருந்தால் இப்போதே கொடுக்க வேண்டியதுதானே. இதிலிருந்தே தெரிகிறது அண்ணாமலை எந்த அளவிற்கு பச்சை பொய்யை சொல்லி வருகிறார் என்பது. நோட்டாவோடு போட்டி போட கூடியவர்கள் தான் பாஜகவினர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in