`குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா?'- ஆளுநர் தமிழிசை கேள்வி

`குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா?'- ஆளுநர் தமிழிசை கேள்வி

"கோவையில் குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா?" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூறினார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கான மாநில தமிழிசை செளந்தரராஜன், கோவைக்கு வரும்போது இப்படி பரபரப்பான சூழ்நிலை இல்லாமல் மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வர வேண்டும். இப்போது நடந்த சம்பவத்திற்கு முன்னால் பல சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது. அதை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து இது போன்ற நிலை எல்லாம் வேறு எங்கும் இல்லை என்பதை தமிழக காவல்துறை உறுதி செய்ய வேண்டும். நமக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. வெடிக்கிற வரைக்கும் நமக்கு தெரியாமல் ஏன் நடந்தது என்பதை அலசி ஆராய வேண்டும். என்ஐஏ மட்டுமல்ல, தமிழக காவல்துறை இன்னும் கவனித்து இருக்க வேண்டும். ஒருவர் மீது மட்டும் கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

பாதுகாப்பிற்கு ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல் பட வேண்டும். கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in