
ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியாவைப் போல எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், இனி வாழ்நாள் முழுவதும் சமாஜ்வாதி கட்சியில் தான் இருப்பேன் என்று ஷிவ்பால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்
தனது பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியை, சமாஜ்வாதி கட்சியுடன் இணைத்த சில நாட்களுக்குப் பிறகு அகிலேஷ் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ்,
பிரயாக்ராஜில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பாஜக குண்டரிசம் செய்யும் கட்சி. இது மக்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்கிறது.இனி, பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இந்த சமாஜ்வாதி கட்சியில்தான் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகிறேன். இது எங்கள் கட்சி. நான் நேதாஜி முலாயம் சிங் யாதவுடன் தொடர்ந்து பணியாற்றினேன், ”என்று கூறினார்.
முன்னதாக டிசம்பர் 8, 2022 அன்று, மெயின்புரி இடைத்தேர்தலில் தனது மனைவி டிம்பிள் யாதவ் வெற்றி பெற்ற பிறகு, அகிலேஷ் யாதவ் ஷிவ்பால் சிங்கை சமாஜ்வாதி கட்சியில் இணைத்தார்.