செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணை!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Updated on
2 min read

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி 2வது முறையாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் வரை செந்தில் பாலாஜி தரப்பு சென்ற நிலையில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 17வது முறையாக, ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த சூழலில்தான், ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எத்தகைய தீர்ப்பை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in