அதிகமில்லை... காங்கிரசுக்கு 20 சீட்தான்; தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆருடம்!

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), முந்தைய தேர்தலை விட அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 20-க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறும் என்றும் பிஆர்எஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் கே.சந்திரசேகர் ராவ்.
பிரச்சாரத்தில் கே.சந்திரசேகர் ராவ்.

தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கம்மம் மாவட்டம், மதிரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், “இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறப் போவதில்லை. அவர்களுக்கு அதே 20 தொகுதிதான் கிடைக்கும். அல்லது அதற்கும் குறைவாகத்தான் கிடைக்கும். எனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் படி 70வது தொகுதியாக மதிராவுக்கு வந்துள்ளேன். எஞ்சியுள்ள தொகுதிகளுக்கும் நான் பிரச்சாரத்துக்கு செல்ல உள்ளேன். நான் பிரச்சாரத்துக்குச் செல்ல, செல்ல காங்கிரஸுக்கு தோல்விதான் மிஞ்சும். அபரிமிதமான மெஜாரிட்டியுடன், முன்பைவிட கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று பிஆர்எஸ் ஆட்சி அமைக்கும்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிஆர்எஸ் தொண்டர்கள்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிஆர்எஸ் தொண்டர்கள்.

தெலங்கானா 2014ல் உருவாவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவை ஆட்சி செய்த காங்கிரஸால் குடிநீரையும், பாசன நீரையும் கூட வழங்க இயலவில்லை. 2014ல் பாரத் ராஷ்டிர சமிதி (அப்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆட்சி அமைந்ததும் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து, நாட்டிலேயே தனி நபர் வருவாய் அதிகம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், அவர் ஆட்சி செய்த காலகட்டம் நெருக்கடி நிலை காலகட்டமாக பதிவாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பட்டியலின மக்கள் வளர்ச்சி பெறவில்லை.

பிஆர்எஸ் கட்சியின் தலித் பந்து திட்டம் போன்று சுதந்திரத்துக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பட்டியலின மக்கள் வளர்ச்சியடையாமல் இருந்திருப்பார்களா?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in