ரஃபேல் வாட்ச் பில்லை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவேன்: அண்ணாமலை அறிவிப்பு

ரஃபேல் வாட்ச் பில்லை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவேன்: அண்ணாமலை அறிவிப்பு

ரஃபேல் வாட்ச் பில்லை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த விழாவில் அண்ணாமலை பேசுகையில், " வாஜ்பாயின் பிறந்தநாள் வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நலத்திட்ட உதவிகள் போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 100 சதவீதம் பூத் கமிட்டிகளை நிறைவு செய்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 25 எம்.பிக்களைப் பெற்று கொடுக்க நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும். ரஃபேல் வாட்ச் குறித்து டீக்கடையில் பேசும்போதுதான் அரசியல் புரட்சி ஏற்படும். ஏப்ரல் மாதத்தில் நடைபயிற்சி துவங்கும்போது ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடுவேன். பொதுமக்கள் எதிர்க்கட்சிகள் குறித்து புகார் அளிக்க வெப்சைட் துவங்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in