மகாராஷ்டிராவின் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டேன்: ஏக்நாத் ஷிண்டே உறுதி

மகாராஷ்டிராவின் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டேன்: ஏக்நாத் ஷிண்டே உறுதி

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லை தொடர்பாக சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “எல்லைப் பகுதிகளில் உள்ள மராத்தி மக்களுக்கு நீதி வழங்கும் பணியை நாங்கள் செய்து வருகிறோம், மகாராஷ்டிராவில் ஒரு அங்குல இடம் கூட எங்கும் செல்ல அனுமதிக்கப்படாது. 40 கிராமங்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என தெரிவித்தார்.

முன்னதாக, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை தகராறு குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் கருத்துகளை கண்டித்துள்ளார். அவர், "திடீரென இப்போதுதான் விழித்தெழுந்ததுபோல மகாராஷ்டிராவில் உள்ள 40 கிராமங்களுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உரிமைகோருகிறார்" என்று கூறினார்.

முன்னதாக, மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பொம்மைக்கு வலுவான பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in