நான் கலைஞரின் பேரன்... மன்னிப்புக் கேட்கமாட்டேன்; அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!

நான் கலைஞரின் பேரன்... மன்னிப்புக் கேட்கமாட்டேன்;
அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!

சனாதன தர்ம ஒழிப்பு குறித்தான தனது பேச்சுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை திமுக எம்.பி-யான ஆ.ராசா தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு என்றால் என்னவென்று கேட்கின்றனர். நாங்கள் வாகனத்தில் வரும்போது, தீபாவளி வாழ்த்துகள் என்று தாய்மார்கள் சொல்கிறார்கள். மற்றொரு பக்கம் இளைஞரணியினர் பெரியார் வாழ்க என்கின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு. எல்லோருக்குமானது தான் திராவிட மாடல் அரசு” என்றார்.

மேலும், “நான் பேசியது இரண்டே நிமிடங்கள் தான். காமராஜர் அரங்கில் பேசிவிட்டு சென்றிருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அதை பெரிதாக்கி, பொய்யாக்கி, பூதாகரமாக்கி, நான் பேசாததை எல்லாம் பேசியதாக கூறியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்த அமைச்சர் சேகர்பாபு மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர். நீங்கள் என்ன செய்தாலும் நான் மன்னிப்புக் கேட்கவே மாட்டேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பேசியது பேசியதுதான். சட்டப்படி சந்திப்போம். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எந்த மதத்தையும் இழிவுபடுத்திப் பேசவில்லை. சமூக நீதி வேண்டும். அனைவரும் சமம் என்பதைத்தான் வலியுறுத்தி பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். கலைஞருடைய பேரன். கொள்கையைத்தான் பேசியுள்ளேன். பின்வாங்க மாட்டேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in