காங்கிரஸின் வெற்றியை இவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? - தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல்!

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்காங்கிரஸின் வெற்றியை இவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? - தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல்!

கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றியைப் பாராட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளை மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்துள்ளார்

கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, பாரதிய ஜனதாவை நாடு முழுவதும் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வரும் நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,“கர்நாடகா தேர்தலில் நாங்கள் தோற்றோம். ஆனால் எங்களின் வாக்கு சதவீதம் குறையவில்லை. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் குறைந்ததால் காங்கிரஸுக்கு பலன் கிடைத்தது. ஆனால் வரவிருக்கும் கர்நாடகா மக்களவைத் தேர்தலில் நாங்கள் 28 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.

காங்கிரஸ் வெற்றியை என்சிபி மற்றும் சிவசேனா (யுபிடி) ஏன் கொண்டாடுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைத்தான் அவர்களால் செய்ய முடியும். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். மகா விகாஸ் அகாதியின் ஆட்சி அமைக்கும் கனவு ஒருபோதும் நிறைவேறாது" கூறினார்

சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in