‘பெஸ்ட் புதுச்சேரி ஆக்கிவிட்டுத்தான் மக்களைச் சந்திப்போம்’ - அடித்துச் சொன்ன அமித் ஷா

‘பெஸ்ட் புதுச்சேரி ஆக்கிவிட்டுத்தான் மக்களைச் சந்திப்போம்’ - அடித்துச் சொன்ன அமித் ஷா
விழாவில் அமித்ஷா

புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக ஆக்கி விட்டுத்தான் மக்களைச் சந்திக்க வருவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

விழாவில் உரையாற்றும் அமித் ஷா
விழாவில் உரையாற்றும் அமித் ஷா

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அரசு முறைப் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காலையில் பாரதியார் நினைவு இல்லத்திற்கும், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றிருந்தார். அதன் பின்னர் புதுவை பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர் அங்கு நடைபெற்ற அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மதிய உணவுக்குப் பின் ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அமித் ஷா, அதன்பிறகு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். அவ்விழாவில் கிழக்கு கடற்கரை சாலையில்.70 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், குமரகுருபள்ளத்தில் 45 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள், .30 கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் புதுச்சேரி காவல் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டோருக்குப் பணி நியமன ஆணையை அவர் வழங்கினார்.

பணி ஆணை வழங்கும் அமித்ஷா
பணி ஆணை வழங்கும் அமித்ஷா

அப்போது பேசிய அவர், " பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது சொன்னது போல புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். பெஸ்ட் புதுச்சேரி ஆக்கிவிட்டுத்தான் மறுமுறை மக்களை சந்திக்க வருவோம். ரூ.6 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றவும் முயற்சி செய்து வருகிறோம்" இன்று அமித் ஷா அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.