மணீஷ் சிசோடியா சிறையில் இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை: கேஜ்ரிவாலின் ஹோலி செய்தி!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்மணீஷ் சிசோடியா சிறையில் இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை: கேஜ்ரிவாலின் ஹோலி செய்தி!

கவலைக்குரிய நிலையில் நாடு உள்ளது என்று நீங்களும் நம்பினால், பிரதமர் மோடி செய்வது தவறு என்று நீங்கள் நினைத்தால், ஹோலி கொண்டாடிய பிறகு நாட்டுக்காக பூஜை செய்யுங்கள் என்று மக்களுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "நாட்டில் வருந்தத்தக்க விஷயங்கள் மேம்பட வேண்டும் என நான் ஹோலி பண்டிகையின்போது தியானம் செய்து பிரார்த்தனை செய்வேன். பிரதமர் சரியானதைச் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், திருவிழாவைக் கொண்டாடிய பிறகு நீங்களும் நாட்டிற்காக பிரார்த்தனை செய்யவேண்டும். நாட்டை கொள்ளையடிப்பவர்கள் தப்பித்துக் கொள்ளும்போது நல்ல வேலைகளைச் செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமான நிலையில் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்திய மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகிய இரண்டு பேர் சிறையில் உள்ளனர்.

சிசோடியா மற்றும் ஜெயின் சிறையில் இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாராக இருக்கும் தைரியமான நபர்கள். ஆனால் நாட்டில் நடக்கும் விவகாரங்கள் என்னை கவலையடையச் செய்கின்றன" என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 26ம் தேதி டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக சத்யேந்திர ஜெயின் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in