மகாராஷ்டிராவின் அஹமதுநகர் அஹில்யாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்? - தேவேந்திர பட்னாவிஸ் சொல்வது என்ன?

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்மகாராஷ்டிராவின் அஹமதுநகர் அஹில்யாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுமா? - தேவேந்திர பட்னாவிஸ் சொல்வது என்ன?

அஹமதுநகரின் பெயரை 'அஹில்யாநகர்' என மாற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் வலியுறுத்துவேன் என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்

அஹமத்நகரில் கோயில்கள் மற்றும் தர்மசாலைகள் கட்டுவதில் பெயர் பெற்ற மராட்டிய மால்வா இராஜ்ஜியத்தின் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் நினைவு நாள் நிகழ்வில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ் மற்றும் பல மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "ராஜமாதா அஹில்யாதேவி ஹோல்கர் இல்லாவிட்டால் காசி இருந்திருக்காது. அவர் இல்லையென்றால் சிவன் கோவில்கள் இருக்காது. அதனால்தான் மக்கள் அஹமது நகரை அஹல்யாநகர் என்று பெயர் மாற்ற விரும்புகிறார்கள். நானும் முதலமைச்சரிடம் இதற்காக கோரிக்கை வைக்கிறேன். நாங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் நாமத்தை உச்சரிக்கும் மக்கள். நாங்கள் ஷிண்டே தலைமையில் சம்பாஜிநகரை உருவாக்கினோம், நாங்கள் தாராஷிவை உருவாக்கினோம். முதல்வர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிப்பாய் என்று நான் நம்புகிறேன், இதனால் அஹமத்நகர், அஹல்யாநகர் என மறுபெயரிடப்படும்" என்றார்

முன்னதாக, அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மகாராஷ்டிர அரசின் முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in