"ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் நானே தூக்கிட்டுக் கொள்கிறேன்" - மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்"ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் நானே தூக்கிட்டுக் கொள்கிறேன்" - மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

பெண் மல்யுத்த வீரர்களால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங், தன் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் நானே தூக்கிட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் ராம்நகர் பகுதியில் உள்ள மகாதேவா ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், “என் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், நானே தூக்கிட்டுக் கொள்கிறேன் என்று மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.

என்னை தூக்கிலிட வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் விரும்பி நான்கு மாதங்கள் ஆகின்றன. ஆனால் அரசாங்கம் என்னை தூக்கிலிடவில்லை. எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் மூழ்கடிக்கப் போகிறார்கள். கங்கையில் பதக்கங்களை வீசுவதால் என்னை தூக்கிலிட மாட்டார்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் கொடுங்கள். நீதிமன்றம் என்னை தூக்கிலிட்டால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று கூறினார்.

மேலும், “மல்யுத்த வீரர்களின் வெற்றிக்கு எனது ரத்தமும் வியர்வையும் சேர்ந்துவிட்டதால் அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். வீரர்கள் அனைவரும் என் குழந்தைகள் போன்றவர்கள். சில நாட்களுக்கு முன்பு வரை என்னை மல்யுத்தக் கடவுள் என்றே அழைத்தனர். மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவராக நான் பொறுப்பேற்றபோது உலக அளவில் இந்தியா 20வது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பால் உலகின் சிறந்த ஐந்து மல்யுத்த அணிகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நான் இரவும் பகலும் மல்யுத்தத்திற்காக வாழ்ந்திருக்கிறேன். மல்யுத்தத்தில் இந்தியா வென்ற ஏழு ஒலிம்பிக் பதக்கங்களில் ஐந்து எனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்தன. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in