குமாரசாமியுடன் தேர்தலுக்குப் பின்பு கூட்டணியா? - டி.கே.சிவக்குமார் சொன்ன அதிரடி வியூகம்!

சிவக்குமார் சித்தராமையா
சிவக்குமார் சித்தராமையா

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி இருக்காது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது

2018 தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. ஆனால் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த சூழலில் இன்று நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தப்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவக்குமார், " தேர்தலுக்குப் பின்னர் ஜேடிஎஸ் உடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லை. நாங்களே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் கட்சி 141 இடங்களில் வெற்றிபெறும்” என்றார்

மேலும், "அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து உங்கள் கேஸ் சிலிண்டர்களைப் பார்த்து வாக்களியுங்கள். சிலிண்டருக்கு மாலை போடுமாறு எனது தலைவர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in