ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலிலும் முழு வலிமையுடன் களமிறங்குவோம்: ஆம் ஆத்மி அதிரடி

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்தி இந்து

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் "முழு வலிமையுடனும் அரசியல் பலத்துடனும்" போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளரும், கட்சியின் தேர்தல் வியூகவாதியுமான சந்தீப் பதக் தலைமையில் டெல்லியில் நேற்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளர் இம்ரான் ஹுசைன் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்யசபா எம்.பியான சந்தீப் பதக், "ஜம்மு-காஷ்மீரில் அடுத்த சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் நாங்கள் முழு பலத்துடனும், அரசியல் பலத்துடனும் போட்டியிடுவோம். இதற்காக ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் கட்சியின் அடித்தளத்தை வேகமாக வலுப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

கூட்டத்தின் முதல் சுற்றில், ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மியின் பணி மற்றும் கட்டமைப்பு மேம்பாடு குறித்து சந்தீப் பதக் மதிப்பாய்வு செய்ததாக கட்சி தெரிவித்துள்ளது. "கடந்த காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து ஜம்மு காஷ்மீரின் ஆம் ஆத்மி கட்சி தலைமையால் சந்தீப் பதக்கிடம் விளக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தல்களுக்கான தேர்தல் வியூகமும் வகுக்கப்பட்டது" என்று ஆம் ஆத்மி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in