பீகாரில் பிரமாண்ட சீதா கோயில் கட்டுவோம்... அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி!

அமித் ஷா
அமித் ஷா

பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் பாரதீய ஜனதா கட்சி சீதா தேவிக்கு கோயில் கட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிரதமர் மோடிக்கு, சீதா தேவி பிறந்த இடத்தில் பெரிய நினைவிடம் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. ராமர் கோயிலில் இருந்து ஒதுங்கிக்கொண்டவர்களால் இதை செய்ய முடியாது. ஆனால், பீகாரின் சீதாமர்ஹியில் சீதாதேவிக்கு ஒரு கோயிலை கட்ட முடியும் என்றால், அது நரேந்திர மோடியால் மட்டும்தான் முடியும்” என்று தெரிவித்தார்.

இந்து புராணங்களின்படி, ராமரின் மனைவியான சீதை, அரசர் ஜனகர் சீதாமர்ஹிக்கு அருகில் உள்ள வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஒரு மண் பானையிலிருந்து உயிர்பெற்றார் என நம்பப்படுகிறது.

அமித் ஷா
அமித் ஷா

இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், தற்போது சீதா தேவி கோயிலுக்கான வாக்குறுதியை அமித் ஷா அளித்துள்ளார்.

பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், சிபிஐ (மா-லெ) 3 தொகுதிகளிலும், விகாஸீல் இசான் கட்சி 3 தொகுதிகளிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in