ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழக்குமா?: உஷ்ணமான ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழக்குமா?: உஷ்ணமான ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு ஓட்டு போடப்போவதில்லை. மக்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பின் தான் தெரிய வரும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும். ஆளுங்கட்சியான திமுக வாக்காளர்களை அழைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு போடுகிறது. அங்கு நடைபெறும் குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களைப் பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் முழுக்க முழுக்க விதிமீறலில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி," வாக்காளர்கள் தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என முடிவு செய்து வாக்களிப்பார்கள். ஸ்டாலின் ஓட்டு போட போவதில்லை. மேலும் மக்கள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியவரும். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாகவும், கடுமையாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதேபோல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கூடி பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in