சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தபோது ஏன் மௌனமாக இருந்தார்? - கேள்வியெழுப்பும் அமித் ஷா!

அமித் ஷா
அமித் ஷாசத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தபோது ஏன் மௌனமாக இருந்தார்? - கேள்வியெழுப்பும் அமித்ஷா!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ள கருத்துகள் மீதான நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்துப் பேசிய அமித் ஷா, “மறைக்க வேண்டிய எதையும் பாஜக செய்யவில்லை. இந்தப் பிரச்சினையை பொது மேடையில் விவாதிக்கக் கூடாது. முறைகேடுகள் குறித்து தகவல் இருந்தால், அவர் பதவிக் காலத்தில் பேசியிருக்க வேண்டும். இப்போது ஏன் இப்படிக் கூறுகிறார்?. இது அவரின் நம்பகத்தன்மை குறித்த சோதனைக்கு அழைப்பு விடுக்கிறது” என்று கூறினார்.

குற்றச்சாட்டுகளை எழுப்பியதால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டதா என்ற கேள்விக்கு, ஷா “அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவது இது முதல் முறையல்ல. அவர் ஒரு காப்பீட்டு மோசடியில் விசாரிக்கப்படுகிறார், விசாரணை நிறுவனம் தனது கடமையைச் செய்கிறது. சிபிஐ சம்மனுக்கும் அவரது குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார். மேலும், “மாலிக் ஜி நீண்ட காலமாக பாஜகவின் ஒரு அங்கமாக இருந்தார். மனிதர்கள் காலத்திற்கு காலம் மாறுகிறார்கள். வாக்காளர்கள் கவனமாக தீர்ப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு, சத்யபால் மாலிக் அம்மாநிலத்தின் கடைசி ஆளுநராகப் பணியாற்றினார். அவர் தனது சமீபத்திய நேர்காணலில், மத்திய அரசின் தவறான அணுகுமுறை புல்வாமா சோகத்தை ஏற்படுத்தியது என்று கூறினார். மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அவர் மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் முன்வைத்தார். ஜம்மு காஷ்மீரில் தனக்கு 300 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாகக் கூறிய புகார் தொடர்பாக சிபிஐ இன்று மாலிக்கிடம் விசாரணை நடத்துகிறது.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய மாலிக்கிடம் சிபிஐ விசாரணை நடத்துவது ஏழு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். பீகார், ஜம்மு காஷ்மீர், கோவா மற்றும் இறுதியாக மேகாலயா ஆகிய மாநிலங்களில் சத்யபால் மாலிக் ஆளுநராக பணியாற்றினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in