அப்துல் வகாப்பை பழி தீர்த்த கோஷ்டி அரசியல்!

அப்துல் வகாப்
அப்துல் வகாப்

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து பாளையங்கோட்டை எம்எல்ஏ-வான அப்துல் வகாப் நீக்கப்பட்டதன் பின்னணியில் திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனின் பெயர் பலமாகவே அடிபடுகின்றது. ஏற்கெனவே திருநெல்வேலி மேயர் சரவணனுக்கும், அப்துல் வகாப்பிற்கும் ஏழாம் பொருத்தம். சரவணன் வகாப் மீதும், வகாப் சரவணன் மீதும் அறிவாலயம் வரை சென்று பஞ்சாயத்து வைத்தார்கள். அப்போதே தலைமையின் கண்டணத்திற்கு ஆளானார் வகாப்.

இந்நிலையில், அண்மைக்காலமாக மாநகர செயலாளர் சுப்பிரமணியனோடும் வகாப் முட்டிக்கொண்டார். சுப்பிரமணியனும் தன் பங்கிற்கு பகுதிச் செயலாளர்கள் சிலருடன் அறிவாலய படியேறி வகாப் மீதான புகார்களை அடுக்கினார். இப்படித் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சொந்தக் கட்சிக்குள் வெடித்துக் கிளம்பிய கோஷ்டிப் பூசலே அப்துல் வகாப்பின் பதவியைப் பறித்தது என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in