ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன்? - சரத்குமார் காரசாரமான பதில்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன்? - சரத்குமார் காரசாரமான பதில்

திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் ஏன் நடித்தீர்கள் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காரசாரமாக பதில் அளித்தார்.

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்

திருச்சியில் சமக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த விளையாட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் நீங்கள் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளீர்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நடிகர் சரத்குமார் பதில் அளிக்கையில், “ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசின் முடிவை முதலில் கேளுங்கள். சரத்குமார் நடித்ததைப் பற்றி இரண்டாவது கேளுங்கள். ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் இப்போது சொல்லிவருகின்றன. ஆனால் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் அனைத்து வகையிலும் பாதிப்பு என முதலில் இருந்தே கூறிவருகிறோம்.

ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் விளம்பரத்தைக் கட்டுப்படுத்துவது அரசுதான். அரசு தடை செய்திருந்தால் நான் எப்படி பயன்படுத்துவேன்? விளம்பரப்படுத்துவேன். நீங்கள் தான் தடை செய்யவே இல்லையே? நீங்கள் தடைசெய்யும் போது அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார் தான் எல்லாரையும் கெடுக்கிறார் என எப்படிச் சொல்வீர்கள்? குடிப்பழக்கம் உடலுக்கு கேடு நானும் அதை சொல்லி வருகிறேன். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா? புகை உடலுக்குக் கேடு. ஆனால் சிகரெட் தயாரிப்பை ஏன் நிறுத்தவில்லை? உலகில் அத்தனையும் இருக்கிறது. நீங்கள் அதைப் பார்த்து கெட்டுப்போகாதீர்கள். மனப் பக்குவத்துடன் இருக்கச் சொல்கிறோம். நல்லனவற்றை ஏற்று, தீயவற்றை ஒதுக்கவேண்டும். நாம் சுயக்கட்டுப்பாட்டு உடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in